இந்தியா என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். உலகில் பரப்பளவு அடிப்படையில் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும். இதற்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலும், தென் மேற்கே அரபிக்கடலும், தென் கிழக்கே வங்காள விரிகுடாவும் சூழ்ந்துள்ளன. இந்தியாவின் மேற்கே பாக்கித்தான், வடக்கே சீனா, நேபாளம் மற்றும் பூட்டான், கிழக்கே வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் நில எல்லைகளைப் பகிர்கின்றன. இந்தியப் பெருங்கடலில் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு அருகில் இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளானவை தாய்லாந்து, மியான்மர் மற்றும் இந்தோனேசியாவுடன் ஒரு கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.மேலும்...
பாண்டிய நாட்டின் மீது மாலிக் கபூரின் படையெடுப்பு - 1310-1311 காலப்பகுதியில், தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி தன் தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர் தலைமையிலான படைகளை இந்திய துணைக்கண்டத்தின் தெற்கே உள்ள நாடுகளைக் கைப்பற்ற அனுப்பினார். போசளர்களை அடிமைப்படுத்திய பின்னர், மாலிக் கபூர் இன்றைய தமிழ்நாட்டின் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். இதற்கு பாண்டிய சகோதரர்களான வீரபாண்டியனுக்கும், சுந்தரபாண்டியனுக்கும் இடையிலான அரசுரிமைப் போரைப் பயன்படுத்திக் கொண்டார். 1311 மார்ச்-ஏப்ரல் காலக்கட்டத்தில், பாண்டிய நாட்டில் அவர்களின் தலைநகர் மதுரை உட்பட பல இடங்களில் திடீர்த்தாக்குதல் நடத்தினார். தில்லி சுல்தானகத்துக்கு அடங்கிய ஆட்சியாளராக பாண்டிய மன்னரை அவரால் மாற்ற முடியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து யானைகள், குதிரைகள், தங்கம், விலைமதிப்பற்ற கற்கள் உட்பட பெரிய கொள்ளை பொருட்களைப் பெற்றார். மேலும்...
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000-இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களைக் கொன்ற நாள் எனத் தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள் (படம்)
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,74,081 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.